
சீமான் ஒரு கந்தக்கிடங்கு.
அதில் எப்போது நெருப்பு விழும்,வெடித்து சிதறும் என்பது தெரியாது.
மேடையில் எதிரிகளின் பிடரியைப் பிடித்து ஆட்டுவது என்பது இவரது விருப்ப விளையாட்டு!
அண்மையில் தளபதி விஜய்யை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டிருக்கிறார். இவரது இயக்கத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது.அதன் விளைவுதான் மேடையில் வெடித்திருக்கிறதோ என்னவோ!
“சர்கார் படத்தில் அரசியல் பேசியதை ஆமாம் நான்தான் பேசினேன்என்று தைரியமாக ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே!
அதை விட்டு விட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்கலாமா? ஜெயலலிதா மீது தனக்கு மரியாதை இருக்கிறது என்று சொல்லலாமா? இதெல்லாம் அவமானம்,. எடப்பாடிக்கெல்லாமா பயப்படுவது?
அவரே மோடியின் அடிமை.
பதவி போனால் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்க மாட்டான்.
நான் விஜய் மீது நிறைய மரியாதை வைத்திருந்தேன்.
நீ எல்லாம் என் தம்பியா? இதில் ஒரு விரல் புரட்சியாம்.!
என் படத்தில் நடிக்க மாட்டாராம்.ஆனால் நான் பேசிய வசனத்தை எல்லாம் தன்னுடைய படத்தில் பேசுவாராம்.
என்னுடைய தம்பிசிம்புதான் உண்மையான சூப்பர்ஸ்டார். அவனை வைத்து 3 படங்களை எடுப்பேன்.அதன் பிறகு அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார்” என்று கூறி இருக்கிறார்.












