
தமிழ்ச்சினிமாவில் ‘ஜிஞ்சர் குரூப்’ என இவர்களை சொல்லலாம்.டைரக்டர்கள் அமீர்,சேரன்,கரு.பழனியப்பன்,ராம்,சீமான்,மிஷ்கின் ஆகியோர் கருத்துகளை துணிந்து சொல்வார்கள்.
இவர்களுடன் சேராவிட்டாலும் சத்யராஜ் தனித்து நிற்பவர்.தந்தை பெரியாரின் ஆள்.“தமிழகத்தை ஆளும் தகுதி நடிகர்களுக்கு (இன்றைய) இல்லை. பதவியை குறி வைத்து அரசியலுக்கு வருகிறார்கள்” என்று பெயரைச் சொல்லாவிட்டாலும் இவர் யாரை சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.
இவர் உலக நாயகனுக்கும் நண்பர்,சூப்பர் ஸ்டாருக்கும் நண்பர்.பிரச்னை என்று வருகிறபோது நண்பர்கள் என பார்ப்பதில்லை.
தமிழர் திருநாளையொட்டி வருகிற திரைப்படங்களில் முதன் முதலாக ரஜினிகாந்த்,அஜித்குமார் இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாகின்றன.
பேட்ட படம் பத்தாம் தேதி வருவதால் சிலர் அஜித் தரப்பினரை அணுகி “விஸ்வாசத்தை பதினாலாம் தேதிக்கு தள்ளி வைத்து விடலாம்” என யோசனை சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் “பத்தாம் தேதியே படம் ரிலீஸ் ஆகவேண்டும்”என கண்டிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக ரஜினி படத்தை அவர்கள் பெரிய போட்டியாக நினைக்கவில்லை என யூகிக்க முடிகிறது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களுடைய மோதலை இணைய தளங்களிலும் பார்க்க முடிகிறது.
இந்த சூழலில்தான் எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியதைப் போல டைரக்டர் அமீர் “விஜய்தான் நம்பர் ஒன்.ரஜினி அல்ல” என சொல்லியிருக்கிறார்.ஆக இணையதளங்கள் இன்னும் சூடாகலாம்.












