ஒரு காலத்தில் மக்கள் திலகமா ,நடிகர் திலகமா என்கிற போட்டி ரசிகர்கள் மத்தியில் குத்தும் வெட்டுமாய் நடந்தது.
காதல் மன்னன் களத்தில் இருந்தாலும் ரசிகர்கள் இரண்டு திலகங்களுக்கும்தான் அதிகம்.அதிலும் எம்.ஜி.ஆருக்கு அரசியல் பின்னணி வலுவாக இருந்தது..
சிவாஜி கணேசனுக்கு அகிம்சா மூர்த்தி கட்சியின் ஆதரவு. அவ்வளவு வலுவில்லை என்றாலும் நடிப்பில் சிவாஜி சிம்மமாக இருந்தார்.அதிகப்படங்கள் இவருக்குத்தான்!
தற்போதைய தமிழ்ச்சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றால் சூப்பர்ஸ்டார், தளபதி,தல இவர்களைத்தான் சொல்லலாம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா படங்களில் நேரடியாக மோதியது ரஜினியும் அஜித்குமாரும்தான்!
வசூலை வைத்து நம்பரைப் போடும் விநியோகஸ்தர்கள் வட்டம் தமிழக அளவில் தல அஜித் முதல் இடத்தில் 3 கோடி ரூபாய் முன்னணியில் இருப்பதாக சொல்கிறது. பி அண்ட் சி ஏரியாவில் தல ஸ்டிராங்.முதல்நாள் வசூல் 1 5 கோடி.தலைவர் வசூல் 1 3 கோடி.
ஆனால் சென்னையில் தலைவரின் கொடிதான் பறக்கிறது. 1.1 2 கோடி. தல வசூல் 88 லட்சம் .