
“கன்னிப்பொண்ணு ஆசையை யாராவது நிறைவேத்துங்கப்பா…இல்லேன்னா காடு கரை வெள்ளாமை வெளையாமப் போயிடும்! “–இப்படி கிராமங்களில் பெரிசுகள் பேசிக்கொள்வது உண்டு.
இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.
கன்னிப்பொண்ணுகள் ஆசைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். காலம் ரொம்ப மாறிப் போச்சுங்க.!
கேரளத்தில் எப்படியோ,தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கீர்த்தி சுரேசுக்கு இன்னும் மவுஸ் இருக்கவே செய்கிறது .மோஸ்ட் வான்டட் பட்டியலில் அவரும் இருக்கிறார்.
அவரது ஆசை தமிழில் அஜீத்குமாருடன் நடிக்க வேண்டும் என்பது. “விஜய்யுடன் நடித்து விட்டேன்.அஜித்குமாருடன்தான் நடிக்க வேண்டும்.அதுவும் நிறைவேறும்” என்பதாக சொல்கிறார் கீ.சு.!
இப்படி சொல்வதை பார்த்தால் எதுவும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போலத் தெரிகிறதே!
“நான் திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன் .அப்படியே கடவுளின் அனுக்கிரகம் .சினிமா நடிகை ஆகி இருக்கிறேன். தமிழ் ஆந்திரா இரண்டும் எனக்கு கை கொடுத்திருக்கிறது”என்கிறார்.
தனக்கு இன்னமும் கல்யாண ஆசை வரவில்லை என்று சொல்லியிருப்பதுதான் அடிக்கோடிட்டு வைக்க வேண்டிய முக்கிய குறிப்பு.












