
படம் வெளியாவதற்கு முன்பாகவே சில அமைப்புகள் கொடி ஆட்டத்தொடங்கி விடும்.
“எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனம் இருக்கு.அதனால் படத்தை நிப்பாட்டு!”
“எங்க கட்சியை தாக்கி சீன் வெச்சிருக்கே.அதை வெட்டலேன்னா.பிளக்ஸ் போர்டை கிழிப்போம்”
“கட் அவுட்டை உடைப்போம்”
இப்படி பல காரணங்களை சொல்வார்கள். இப்படி பல படங்கள் எதிர்ப்புகளை பார்த்திருக்கிறது.
தமிழில் டப் ஆகி வரும் ஜான்சிராணி படத்துக்கு இப்படியொரு ஆபத்து வந்திருக்கிறது.
ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா என்கிற மராட்டிய அமைப்பு அந்த படத்தில் ஜான்சி ராணிக்கும் பிரிட்டிஸ் அதிகாரிக்கும் தப்பான தொடர்பு இருப்பதாக காட்டியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
அந்த காட்சியை வெட்டலேன்னா தியேட்டரில் படத்தை ஓட்ட விடமாட்டோம்”என்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
“அட வெட்டிகளா, இந்த படத்தை நாலு சரித்திர ஆசிரியர்கள் பார்த்து ஓகே சொல்லி இருக்கிறார்கள், சென்சார் போர்டும் சரி சொல்லி விட்டது.பிறகென்ன எதிர்ப்பு.தொடர்ந்து கொடுமைப்படுத்தினால் உங்களை ஒன்னுமில்லாமல் செய்துவிடுவேன் கபர்தார்”என்று சொல்லியிருக்கிறார் ஜான்சிராணியாக நடித்திருக்கிற கங்கனா ரனாவத்,












