சுத்தி நின்னு கல்லு வீசி கலாட்டா பண்ணிய கூட்டம் கலைந்து போய் கால் மணி நேரம் கழித்து “யார்றா கல்லு வீசின கபோதி ,இப்ப வாடா ,”என்று அடி வாங்கின ஆள் சவுண்டு விட்டா ….என்னன்னு நினைக்கிறது?
அப்படி ஆகிப் போச்சுங்க. நம்ம ஆக்சன் கிங் அர்ஜுன் நிலைமை.அவர் கூட சும்மா இருந்திட்டார்.
ஆனா அவர் நண்பர் சுமன் இருக்காரே சும்மா இருக்காம இப்ப வந்து லவுட் ஸ்பீக்கரை கையில் எடுத்துக்கொண்டு அலாரம் அடிக்கிறார்.
அர்ஜுன் மீது பாலியல் குற்றம் சாட்டி அந்த நினைவே இல்லாம அவங்கவங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்காங்க.
நம்ம ஆள் சுமன் பொங்கிட்டார். பொங்கல் டைம் என்பதினாலேயா?
“அர்ஜுன் மீது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியுமா? நிரூபிச்சா கட்டுப்படறேன்! குறுகிய காலத்தில் பெரிய நடிகையாகனும்னு ஆசை! திறமையில்ல. மச்சூரிட்டி கிடையாது.இடையில் வர்றவன் சொல்றதை நம்பி வலியப்போய் இரை ஆகிட்டு யார் மீதாவது குற்றம் சொல்றது! 9 0 களில் இருந்த எல்லோருமே திறமையான நடிகைகள் !அவங்க நடித்த காலத்தில் இந்த மாதிரியெல்லாம் சொன்னதில்ல. “என்கிறார் சுமன்.
அப்ப இப்ப இருக்கிற நடிகைகளுக்கு திறமை இல்லையா சுமன் சார்?