
“வயசும் ஆகிப்போச்சு.! உன் வயசில இருக்கிறவங்கல்லாம் கல்யாணம் ஆகி குடும்பம் நடத்துறபோது நீ மட்டும் கொண்டி மாடு மாதிரி ஊர சுத்திக்கிட்டிருந்தா எப்படி?” என்று வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கிற ஆம்பளைகளை பார்த்து கேட்கிற காலம் மாறி இப்ப நடிகைகளை பார்த்து கேட்கிறாங்க.
“எம்மா உனக்கு எப்ப கல்யாணம்?”
“வாழ்க்கையில ஒசந்த நிலைக்கு வரணும்.அவார்டு வாங்கனும்.சிறந்த நடிகைன்னு பேர் எடுக்கணும்!”
இப்படி கேட்டுக்கேட்டு நிருபர்களுக்கும் காது மரத்துப்போச்சு.
காஜல் அகர்வாலை பார்த்து ஒரு நிருபர் கேட்கிறார்.
“யம்மா இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு சொல்வே?”
அவரது பரிதாப நிலை புரிந்து காஜல் தனது முடிவை சொல்கிறார்.
“நான் சினிமாக்காரர் யாரையும் கல்யாணம் பண்ற மாதிரி இல்லை.எனக்கு மாப்ளை வெளியிலதான்! நான் எத்தனையோ சினிமாக்காரர்களுடன் நட்பா பழகி இருக்கேன்.ஒருத்தரையும் வாழ்க்கைத் துணையா நினைச்சுப்பார்க்க முடியல.என்னுடைய ஒர்க் கல்ச்சர் புரிந்த ஆள்தான் எனக்கு மாப்ள!”
அப்பாடா உலக பிரச்னை முடிஞ்சிதப்பா!












