120 ரூபா டிக்கெட்டுக்கு பல மடங்கு அதிகமாக 1500 ரூபா வரை சில தியேட்டர்காரர்கள் கட்டணமாக வாங்கினார்கள்.
அதாவது பேட்ட,விஸ்வாசம் படங்களை திரையிட்ட சில தியேட்டர்காரர்கள் மட்டும் இந்த கொள்ளையை நடத்தினார்கள்..
கூடுதல் விலைக்கு விற்றால் கூண்டுதான் என்று எச்சரித்த அமைச்சரும் குப்புற அடித்துப் படுத்துத் தூங்கி விட்டதால் அரசு எந்திரமும் அப்படியே படுத்து அது தனி கலெக்சன் பார்த்து விட்டது.
தமிழகம் முழுவதும் இந்த கொள்ளை நடந்தது.
ஆனால் மதுரையைச் சேர்ந்த மவராசன் மகேந்திர பாண்டி என்பவர்மட்டும் அந்த கொள்ளைக்கு எதிராக கொடியை கோர்ட்டுக்குக் கொண்டு போய்விட்டார்.
மதுரையை கண்ணகி முழுக்க எரிக்கவில்லை சாமி.இந்த மாதிரியான நல்லவர்களை விட்டு விட்டுத்தான் எரித்திருக்கிறாள் பத்தினி!
பொங்கல் நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என பேட்ட.விஸ்வாசம் ஓடிய தியேட்டர்களை விசாரணை நடத்தி கண்டு பிடிக்க 2 3 நல்லவர்களை நியமித்தது கோர்ட்டு!.
இதன் மூலம் 3.53 கோடி கேளிக்கை வரி மதுரை மாநகராட்சிக்குக் கிடைத்திருக்கிறது.
விசாரணை நடத்திய அந்த 23 பேருக்கும் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கும்படி மாநகராட்சிக்கு கோர்ட்டு உத்திரவிட்டிருக்கிறது.
நியாயவான்கள் அய்யா!