திரை உலகில் இருந்து அரசியலுக்குச் சென்றவர்களில் கருணாசும் ஒருவர். இசைக்குடும்பம்.மனைவியும் பாடுவார்.மகனும் பாடகர்தான்.
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கருணாஸின் மகன் கென் கருணாசும் நடித்திருக்கிறார்.
தற்போது வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தனுஷ் நடிக்கும்’அசுரன்’படத்தில் முக்கிய வேடம்.
பிள்ளாய்…நீயும் தந்தையின் தடம் தொட்டு அரசியல் பக்கமாக ஒதுங்கி விடாதே என்பதுதான் நம்மைப் போன்றவர்களின் அறிவுரை.