
சர்வம் தாளமயம்-
‘சதா’ சர்வமும்
தாள லயம், ராக ஆலாபனை,
ரசனை ரகளை-
இப்படி இசைப்பட வாழும் கலைஞர் ராஜீவ் மேனனின் படைப்பு.
நேற்று IR&ARR இணைவதைக் கூட
நேரில் காண இசைவில்லாமல்,
ஆனால் இசையோடு
இருக்க விரும்பி
‘சதா’ கண்டேன்.
சில தாளத்தில்
சிலிர்த்தேன்
சிலதில் கரைந்தேன்
பலதில் நிறைந்தேன்!
ஏன்? -கேட்டவர் பார்த்தீபன்.
நேற்றைய விழாவை அவர் புறக்கணிக்க ஒரு காரணம் இருந்தது. இன்றைய புறக்கணிப்புக்கு காரணமே தேவையில்லை.
இளையராஜா என்றால் பாரதிராஜா,வைரமுத்து இல்லாமலா?
பாரதிராஜாவினால் விழாவில் கலந்து கொள்ள இயலாது. பார்த்தீபனைப் போலவே இவரும் கொதித்துப் போயிருக்கிறார்.












