
கவியரசர் கண்ணதாசன் ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டினார் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில்.
“தான் பதவியில் இருக்கும்போது தன் கட்சியை விட்டு ஒருவரை விலக்கினார் ஒருவர். இப்போது அவரது பதவி போய்விட்டது.யார் விலக்கப்பட்டாரோ அவர் வந்திருக்கிறார்.”
அந்த வரிகள் இயக்குநர் பார்த்தீபனை பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது.
96 படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு வந்திருந்தார் .
அணிந்திருந்த சட்டையில் இசையை குறிக்கும் அடையாளம். அந்த சட்டைக்கான பொருள் அவரது பேச்சில் இருந்தது.
படம் முடிந்த மூன்றாவது நாளே சக்சஸ் மீட் என பழகிப்போன காலத்தில் நூறாவது நாள் கொண்டாடுகிற பெருமையை விஜயசேதுபதி – திரிஷா இணை பெற்றிருக்கிறது.
ஹில்டன் ஹோட்டலில் அமர்க்களமான விருந்து. பார்த்தீபனின் பேச்சும்தான்!
“காதலிக்க காதலியோ காதலனோ தேவை இல்லை!
காதல் மட்டும் போதும்.
ஆணோ, பெண்ணோ ஆசைப்படுவது ஒரு இடம்.வாழ்க்கைப்படுவது வேறிடம் என பொதுவாக அமைவது உண்டு.!
அதைப்போல இளையராஜா சார் விழாவில் போட்டுக்கொள்வதற்காக ஒரு மாதத்துக்கு முன்னாடியே இசை சின்னத்தோடு காதலுடன் ரெடி பண்ணி இருந்தேன்.
சில காரணங்களால் போக முடியவில்லை.அந்த சட்டையைப்போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன்.
‘யமுனை ஆற்றிலே’பாடலின் வெர்ஷனை விட அந்தப்பாட்டு இந்த படத்தில் எப்போது வரும் என்றுதான் காத்திருந்தேன்.
அந்த காட்சியைப் பார்த்த பிறகுதான் இயக்குநரின் காலைத் தேடினேன் .தொட்டுக்கும்பிட,!
எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் மக்களிடம் பேசும்போது விஜய்சேதுபதி மீது அப்படி ஒரு ஈர்ப்பு.
கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் ஆம்பள அமிர்தானந்தமயியாக இருக்கிறார்.
அந்த காலத்தில் தியாகராஜா பாகவதருக்குதான் அதிகமான பெண் ரசிகைகள் இருந்தார்கள் என சொல்வார்கள். அவருக்குப் பிறகு அந்த இடம் விஜயசேதுபதிக்குத்தான். எனக்கே சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது” என்றார் பார்த்தீபன்.












