Thursday, July 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

திருமணம். ( விமர்சனம்.)

admin by admin
March 5, 2019
in News, Reviews
438 5
0
613
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமணம்.விமர்சனம்.சேரன், தம்பி ராமையா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், எம் எஸ் பாஸ்கர்,சுகன்யா. இயக்குனர்  சேரன். சினிமா முரசம், தரவரிசை; 4/5.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாசிரியர் இயக்குநர் சேரன் மங்கலகரமான திருமணத்துக்கு வந்திருக்கிறார் ,சில திருத்தங்களுடன்.!

You might also like

5 மொழிகளில் வெளியான ‘ராமாயணம்’ பட டிரெய்லர் !

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!

கொலை ,கொள்ளை, ஆபாசம் அடிதடி தவிர்த்து வந்திருப்பது  ஆறுதல். பேஸ்புக் வழி காதலால் மனம் கலந்தவர்களால் திருமணத்தில் கூட முடியாமல் போவதேன்?

காரண காரியங்களை தனக்கே உரிய குரலில் சொல்லி இருக்கிறார்.

சேரன் வருமானவரித்துறை அதிகாரி.இவரின் தங்கை காவ்யாவுக்கு  தனியார் துறையில் பணி. அம்மா வடிவாம்பாள் ,மாமா தம்பி ராமையா. அளவான குடும்பம். பக்கா செட்டிநாட்டு தோற்றம்.வடிவாம்பாளின் பவள மாலை தெக்கித்தி சீமையின் கைம்மை அடையாளம்.

உமாபதிக்கு தனியார் எப்.எம்.மில் வேலை.சித்தப்பா எம்.எஸ்.பாஸ்கர்.அக்கா சுகன்யா..கைக்கு அடக்கமான குடும்பம் என்றாலும் ஜமீன் பரம்பரை.

உமாபதி,காவ்யா கல்யாணத்துக்கு சாதியோ,அந்தஸ்தோ தடையில்லை என்றாலும் கல்யாணம் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற மாயை, ஆடம்பரம் தேடுகிற சுகன்யாவினால் பிரிய நேரிடுகிறது.

பிரிந்தவர்களை எப்படி சேரன் சேர்த்து வைக்கிறார் என்பது  சற்றே நீளமுடன்.!

இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என நடிகர்களை தேர்வு செய்வதில்அடங்கி இருக்கிறது  வெற்றியின் ரகசியம். படத்தின் நாயகன் உமாபதி,நாயகி காவ்யாவாக இருந்தாலும் நம் நெஞ்சைக் கலங்கடிப்பது எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா இருவரும்தான்.! பிற்பாதியில் அவரவர் சுயசரிதையை சொல்கிறபோது நம்மையறியாமலேயே தேம்புகிறோம்.

வெட்டிச்செலவு,டாம்பீகத்தின் உச்சம்,என சேரன் பட்டியலிடுகிற எல்லாமே கோடீஸ்வரர்களுக்குரிய  குணநலன்கள். அவைகளை மாத ஊதியத்தில் குடும்பத்தைக்  கடத்துகிறவர்கள் ‘கடன் வாங்கி’ கல்யாணத்தை நடத்துகிற போதுதான் அவர்களின் கழுத்துக்கு கயிறாகிறது. வருமானவரித் துறை உயரதிகாரி ஜெயபிரகாஷ் வழியாக சொல்லி இருக்கிறார் சேரன்.

முதல்பாதியை விட இடைவேளைக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது. கதையை விட்டு விலகியதைப் போல உணர்வு.!

பரதத்தின் அழகு,அதற்கிணையான கோட்டில் இன்றைய நடனம் என வகை பிரித்து காவ்யா,உமாபதியை படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.!ஆனால் காவியாவை பரதத்தில் காட்டி விட்டோம் அதற்கு ஈடாக உமாபதியையும் காட்டியாக வேண்டும் என்கிற அவசியம் ஏன் வந்தது இயக்குனருக்கு?

சுகன்யாவுக்கு பொருந்துகிற கேரக்டர் என சொல்லுகிற அளவுக்கு பொருமக் கூடிய வேடம்.

குடும்பத்துடன் பார்க்க ஒரு படம்.

 

Tags: உமாபதிஎம்.எஸ்.பாஸ்கர்காவ்யாசுகன்யாசேரன்தம்பி ராமையா
admin

admin

Related Posts

5 மொழிகளில் வெளியான  ‘ராமாயணம்’ பட  டிரெய்லர் !
News

5 மொழிகளில் வெளியான ‘ராமாயணம்’ பட டிரெய்லர் !

by admin
July 30, 2026
கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !
News

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

by admin
July 30, 2026
காதலும் த்ரில்லும் கலந்த  ‘சிக்னல் அட் 11.30’!
News

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!

by admin
July 30, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!
News

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

by admin
July 30, 2026
அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!
News

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

by admin
July 29, 2026

Recent News

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

July 30, 2026
காதலும் த்ரில்லும் கலந்த  ‘சிக்னல் அட் 11.30’!

காதலும் த்ரில்லும் கலந்த ‘சிக்னல் அட் 11.30’!

July 30, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’!

July 30, 2026
அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

July 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?