Saturday, July 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இயக்குநர் கண்ணனுக்கும்,பாலாஜிக்கும் என்ன மோதல்?

admin by admin
March 2, 2019
in News
434 5
0
608
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
“எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம்” என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.
“நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மா தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இங்கு இருக்கிறேன். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு நாம படம் பண்ணலாமா என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார். தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நல்ல ஒரு கருத்தை சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் இசையமைப்பாளர் ரதன்.
“அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன் தான் அதிகம் எனக்கு காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீங்க என நம்புகிறேன் “என்றார் நடிகை இந்துஜா.
“ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. இவன் தந்திரன் படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
“படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம். ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன்” என்றார் நடிகர் அதர்வா.
இந்த சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா, எம்கேஆர்பி ப்ரொடக்‌ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
Tags: அதர்வாகண்ணன்பூமராங்
admin

admin

Related Posts

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!
News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

by admin
July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
News

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

by admin
July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?