
“நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான்
தாள் வாழ்க.
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க,
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என இப்படி திருவாசகம் பாடிய வாயினால் எப்படி சினிமாப் பாடல்களைப் பாடி சிவராத்திரியை கொண்டாட முடிந்தது?
கோவை அருகே ஆக்கிரமிப்பில் வளர்ந்த ஆசிரமம் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் அங்கே சிவராத்திரி ஆட்டங்கள்.
இதற்கு ராணா ,தமன்னா,காஜல்,அதிதிராவ் என சினிமா பிரபலங்கள் .இவர்கள் இரவு முழுவதும் தூங்கவில்லையாம். ஆடிப்பாடினார்களாம்.
இவர்களை விட எத்தனையோ லட்சக்கணக்கான சிவபக்தர்கள் தங்களின் இல்லங்களிலேயே சிவனின் திருவாசகம் படித்து சிவராத்திரி விரதம் இருந்திருக்கிறார்கள். இதை விடவா சத்குரு சாமியாரின் ஆட்டத்துக்கு பலன் கிடைத்து விடப்போகிறது. ஆன்மீகம் அதனுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது.
பக்தி பகல் வேஷமாகி விட்டது.












