திருடப்பட்டு விட்டது இதயம் என வடநாட்டு வாலிபர் வட்டம் அதிர்ந்து போயிருக்கிறது. அதிர்ச்சியில் கிடக்கிறார்கள் சக நடிகைகள்.!
இதே ரேஞ்சில் போனால் அம்மா ஸ்ரீ தேவியின் இடத்தை கவர்ச்சியினாலேயே கபளீகரம் பண்ணிவிடுவார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
தக்த் என்கிற படத்தில் கார்கில் யுத்த வீராங்கனை குஞ்சன் சாக்சேனா வேடத்தில் நடித்திருக்கிறார் ஜான்வி. முதல் இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்து பெயர் வாங்கிவிட்டார்.
அவர் ஜிம் முக்குப் போய் வந்த சமயம் பார்த்து அத்தனை போட்டோ கிராபர்களும் படம் பிடித்து தள்ளிவிட்டார்கள்.
அந்தப் படம்தான் கந்தகமாக கனன்று கொண்டிருக்கிறது.