
ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தால் அராஜகங்கள் ஆயிரம் செய்யலாம்,மாட்டினாலும் ஜாமீனில் வந்து விடலாம் என்கிற பாதுகாப்பு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உத்திரவாதம் போலும்..!
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை காதல் லீலையில் மயக்கி தங்களது காமத்துக்கு இரையாக்கிக்கொண்ட ஒரு தறுதலை கூட்டம் அண்மையில் மாட்டியது.
ஒரு பெண்ணின் சகோதரர் கொடுத்த புகார் சிலரை அடையாளம் காட்டியது. ஆத்திரம் அடைந்த கும்பல் அவரைத் தாக்கியது.
பெயருக்கு போலீசும் நடவடிக்கை எடுத்தது. பார் என்ற அடைமொழியுடன் நாகராஜ் என்கிற ஆள் மாட்டினார் .ஜெயலலிதா பேரவை செயலாளர்.
ஜாமீனில் வெளிவராத சட்டப்பிரிவுகளில் மாட்ட வேண்டியவரை ஜாமீனில் விட்டு விட்டார்கள். எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்தினால் அதிர்ந்து போனது அதிமுக தலைமை !
தேர்தலும் நெருங்கிவிட்டதால் அந்த நாகராஜை எடப்பாடி,ஓபிஎஸ் இருவரும் கட்சியை விட்டு விலக்கி இருக்கிறார்கள்.
எத்தகையவர்கள் அந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.அவர்களுக்கு அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பார்த்து என்ன சொல்வது?












