எல்லா அரசியல் கட்சிகளும் இன்னமும் தேர்தல் அறிக்கை விடவில்லை.!
ஆனால் ‘கைலாசத்திலிருந்து ‘அறிக்கை வந்திருக்கிறது.
பரமசிவன் விட்ட அறிக்கை.!
“எனது பக்தர்களே!
21,நாட்கள் அன்னம்,தண்ணீர் இல்லாமல் இருங்கள்.
சத் சங் பாடலை மட்டுமே கேளுங்கள்.
நித்யானந்தா டி.வி. மட்டுமே பாருங்கள். உலகம் முழுவதும் பரப்புங்கள்..
கைலாசத்தின் குடிமகனாக மாறுங்கள்.
அதில் உங்களுக்கு எந்த டிபார்ட்மென்ட் பிடிக்குமோ அதில் சேர்ந்து விடுங்கள்.
கைலாசத்தின் தூதரகங்கள் உங்கள் நாட்டில் இல்லையா?
உடனே கையெழுத்துப் போட்டு அந்த நாடுகளில் திறப்பதற்கு மனு செய்யுங்கள்”
இப்படியாக நித்தியானந்தா கோரிக்கை விட்டிருக்கிறார் பக்தர்களே!
இவரே கைலாசம் என்கிற நாட்டை உருவாக்கி இருக்கிறார்.விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.அது மட்டுமே இந்து தேசம்.( வச்சார்யா பி.ஜே.பி.க்கு ஆப்பு!) ஒன்லி ஹிந்து நேஷன்1
மாநகராட்சி தண்ணீர் லாரி டிரைவர்களிடம் சொன்னால் அவர்கள் டைரக்டாக கைலாசத்துக்கே அனுப்பி வைத்து விடுவார்கள் என்பது நித்திக்கு தெரியாமலா இருக்கும்?
கோவை சத்குரு சாமியாருக்கு இவர்தான் சரியான பைஃட் கொடுக்கிற ஆள்..இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி விவாதம் பண்ணுங்கய்யா என்று சொல்ல வேண்டும்!
சிறந்த பொழுது போக்கு அதுவாகத்தான் இருக்கும்.!