பிடித்துப்போன நடிகையருடன் நடிப்பதென்றால் சில நடிகர்களுக்கு உற்சாக பானம் அருந்திய மாதிரி!
இயக்குநர் தனக்கு வேண்டியவராக இருந்து விட்டால் ரகசியமாக அவரிடம் சொல்லிவிடுவார்கள். “நெருக்கமான சீன்கள் வைப்பா!”என !
மிகப்பெரிய நடிகர்கள் அப்படி சொல்லி நடந்திருக்கிறது.
இந்த நெருக்கத்திலிருந்து தப்பிய ஒரே நடிகை பானுமதிதான்!
அணைத்தல் காட்சிகளில் குறுக்காக தனது கைகளை வைத்துக் கொண்டு நெருக்கத்தை தவிர்த்து வந்தவர்.
ஆனால் தற்கால நடிகைகள்’ம்’ சொல்வதற்குள் நாயகனின் உதடுகளை கவ்வுவதற்கு ரெடியாகவே இருக்கிறார்கள். சிலர் இஷ்டப்படுகிறார்கள்.பலர் உதறி விடுகிறார்கள்.
இஸ்பேட் ராஜா ஹரிஷ் கல்யாணுக்கு இன்டஸ்ட்ரியில் ‘லவ்வர் பாய்’என்கிற இமேஜ் இருக்கிறது. இவரும் மகத் போலவே!
இன்று வெளியாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்கிற படத்தில் நாயகியுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்.முத்தக் காட்சியும் உண்டு.
அவருக்கு முத்தக்காட்சியில் நடிப்பது என்றால் பெரிய கஷ்டமாம்.
“எவ்வளவு கஷ்டம் என்பதை ரைசாவிடம் கேட்டுப்பாருங்கள்” என்கிறார்.
ரைசாவிடம் ஏன் கேட்கவேண்டும்?
“முத்தக்காட்சிகளில் நடித்தால் எனக்கு முத்திரையை குத்தி விடுவார்கள். எனவே அடுத்து வரும் படங்களில் தவிர்த்து விட முயற்சிப்பேன்” என்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் குரு சிம்புதான் சொல்ல வேண்டும்!