சத்யராஜ் பிள்ளைகள் இருவருமே அவரைப் போலவே சீர்திருத்தவாதிகள்.
மகன் சிபி நடிகர். மகள் திவ்யா ஊட்டச்சத்து ஸ்பெஷலிஸ்ட். திவ்யாவின் தனிக்குணமே தந்தையைப் போல துணிச்சலாக கருத்துகளை வெளியிடுவதுதான்.!
இவர் தி.மு.க.தலைவர் ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சலசப்பினை உருவாக்கியிருக்கிறது.
பல யூகங்கள்.
“திமுக.வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரோ?”
“கட்சியில் சேர்ந்து விடுவாரா?”
“அரசு மருத்துவமனை ஊழல்கள் பற்றி பேசியிருப்பாரோ?”
இப்படி பலப்பல!
ஓரளவு ஊழல்கள் என்பது சரியாக இருக்கும் என்பது எமது கருத்து.ஏனென்றால் அவர் ஊட்டச்சத்து டாக்டர்.அதில் பிரபலமானவர்.
ஸ்டாலினை சந்தித்ததைப் பற்றி திவ்யா என்ன சொல்கிறார்?
“கலைஞர் குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்புடன் இருந்துவருகிறது. என்னுடைய அப்பா சத்யராஜ் கலைஞர் வசனம் எழுதிய படத்தில் நடித்திருக்கிறார். தலைவர் ஸ்டாலினை சந்தித்தது சாதாரணமான ஒன்றுதான்.
எனக்கு அரசியலில் ஆர்வம் இருந்தாலும் நாங்கள் அது பற்றி பேசவில்லை.
எனது மருத்துவம் சார்ந்த தொழில் பற்றிதான் பேசினேன். ஐந்து பெண்களை எடுத்துக்கொண்டால் அவர்களில் இருவருக்கு ரத்த சோகை, இரும்பு சத்து இல்லாமை ஆகியவை இருக்கிறது.
இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும். பல ஆபரேஷன் தியேட்டர்கள் சுகாதாரமற்று இருக்கின்றன. அங்கேயே அப்படி என்றால் வராந்தாக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.சுத்தம் இல்லை.
போர்வை, தலையணை போதிய அளவுக்கு இல்லை. நோயாளிகளிடம் காசு வாங்கிகொண்டு கொடுக்கிறார்கள். இது லஞ்சம்.
முறையான தடுப்பூசி மருந்துகளும் இல்லை. காலாவதியான மாத்திரை மருந்துகள் பற்றி கண்காணிப்பதற்கும் ஆட்கள் இல்லை என்பதை பேசினேன்”என்கிறார் திவ்யா.
இவரது சந்திப்பு பற்றி நமது யூகம் “நாளை ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் “என்பது அவரது நம்பிக்கை.ஆகவே முதல்வராகிற வாய்ப்பு இருக்கிற ஸ்டாலினிடம் பேசி இருக்கிறார் என நினைக்கலாம் அல்லவா!