
‘கொலையுதிர்காலம்’பட விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைப் பற்றி ராதாரவி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
வெடித்து சிதறிய பின்னர் அதன் சத்தம் மொத்தமாக அமுங்கிவிட்டது.!
பொதுவெளிக்கு வந்து நயன்தாரா தனது கருத்தை அறிக்கையில் அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
ராதாரவியை நடிகர் சங்கம் எந்த வகையில் விசாரணை செய்யும்,? உச்ச நீதிமன்ற உத்திரவுப்படி உள்புகார் கமிட்டி அமைக்கப்படுமா, அல்லது விசாகா கமிட்டியா? என்று கேட்டிருந்தார்.
பகிரங்கமாக கேட்டவர் நடிகர் சங்கத்திற்கு புகார் செய்திருக்க வேண்டுமல்லவா?
செய்திருக்கிறாரா?
“நயன்தாரா கடிதம் எழுதியிருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கையில் இறங்கும். இதுவரை சங்கத்துக்கு புகார் கடிதம் எதுவும் அனுப்பவில்லை” என்கிறார் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்.வண்ணன்.
அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு சொன்னதாக வெளியாகி இருக்கிறது.
“லட்சுமி.ரோகிணி.சுகாசினி,ஸ்ரீ பிரியா போன்ற ஆளுமைகளை வைத்து ஒரு கமிட்டி அமைத்தல் என்பது சங்கத்தின் நோக்கம்.
விதிப்படி திட்டமிடப்படவில்லையே தவிர செயல்பாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எங்கள் நிர்வாகக் கமிட்டி வேலைகள் இந்த மாதமுடன் முடிகிறது.ஏப்ரலுக்குப் பின்னர் எதுவாக இருந்தாலும் வரக்கூடிய புதிய நிர்வாகம் அதை செய்யும்”என்கிறார் பொன். வண்ணன்.
“ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறோம் .அதே அடிப்படையில் அவருடன் இணைந்து நடிக்க முடியாது எனவு தெரிவித்திருக்கிறோம்.
தார்மீக அடிப்படையில் அவர் நடிப்பதை சட்டப்படி தடுக்கமுடியாது.தண்டிக்கவும் முடியாது. அந்த அதிகாரம் சங்கத்துக்கு கிடையாது.” என்றும் சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில்தான் நயன்தாராவின் வித்தியாசமான ‘ஐரா’ படம் வெளியாகிறது.












