
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது.
நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,ஆகியோர் நடிக்கிறார்கள்.
வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கலாம் என தற்போது சொல்கிறார்கள். நம்பகமான இடத்தில் இருந்துதான் இந்த செய்தி வந்திருக்கிறது.
படப்பிடிப்பை தமிழ்நாட்டில் தொடங்காமல் மும்பையில் தொடங்குகிறார்கள்.
தேர்தல் காலம் என்பதால் சென்னையில் நடத்த வேண்டாம் என்று ரஜினி சொன்னதின் பேரில் இட மாற்றம் நடந்திருக்கிறது.
தனியார் இடத்தில் சென்னையைத் தாண்டி நகர்ப்புறத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு அரங்குகளை விடவா மும்பை பாதுகாப்பு?
இங்கு நடத்தினால் அரசியல் அளவில் ரஜினிக்கு என்ன இடையூறு வந்து விடப்போகிறது?தெரியவில்லை. இன்னும் கட்சியை தொடங்கவில்லை. தேர்தல் குறித்து அவரது கருத்தை சொல்லிவிட்டதால் எந்த கட்சியும் அவரை அணுகப்போவதில்லை.ரசிகர்களும் தொல்லை கொடுக்கப்போவதில்லை.பிறகேன் இந்த இட மாற்றம்.!
இந்த மாற்றத்தினால் தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும்!












