விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்டவர் . நாம் ஏன் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்ததன் விளைவு,
இன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். இவர் பெயரோடு “மரம்” இணைந்து மரம் கருணாநிதியானார்.55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை.
விசேஷ நாட்களில் வேலைக்கு செல்வது, தன்னுடைய சம்பளத்தில் இருந்து மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும், நட்டும் வருகிறார்.
இவரது சேவையை பாராட்டியும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி கெளரவித்துள்ளார்.