
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவரைத்தான் குறிக்கும் அவர்தான் அமிதாப் பச்சன்,! 77 வயசு. இன்னும் மார்க்கெட்டில் இருக்கிறார். உலகம் அறிந்த உயர்ந்த மனிதன்.!
இவர் அவ்வப்போது ஜோக் சொல்வது உண்டு.
அண்மையில் அவர் இந்தியில் அடித்த ஜோக் தற்போது டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் படியுங்கள்.
மனைவி சலிப்புடன் கணவனைப் பார்த்து “என்னங்க நீங்க,கல்யாணத்துக்கு முந்தி என்னை ஹோட்டல்களுக்கு கூட்டிட்டு போனிங்க,சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனிங்க.கல்யாணத்துக்குப் பிறகு வீட்டு வாசலைக்கூட தாண்டலியே” என்று வருத்தப்பட்டாள்.
அதற்கு கணவன் சொன்னான்.:
“எலக்சன் முடிஞ்ச பிறகு யாராவது தெருக்களில் பிரசாரம் செய்றாங்களான்னு பார்த்தியா?”
எப்புடி ?












