
இயக்குநர் ஷங்கரின் 25 வது ஆண்டு நிறைவு விழாவை இயக்குநர் மிஸ்கின் தனது ஆபீசில் அட்டகாசமாக சக இயக்குநர்களுடன் கொண்டாடினார் என்பதை முன்னதாகவே சொல்லியாச்சு. ஆனால் நீல வண்ணத்தின் பின்னணி ,நீல வண்ண டி.சர்ட் என எல்லாமே ப்ளு வாக இருந்ததுதான் காரணம்தான் புரியவில்லை. நீல வண்ணக் கண்ணா வாடா!
என்றாலும் அன்று என்ன நடந்தது?
25 வகையான வித்தியாசமான பரிசுகளை ஷங்கருக்கு மிஸ்கின் வழங்கினார். ஆனால் அந்த பரிசுகள் என்ன என்பதை முன்னதாகவே யூகித்து சொல்கிறவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பரிசு என்பதாகவும் அறிவித்தார்.
இரண்டு பேர் சரியாக சொல்லி பரிசுகளைத் தட்டிசென்றனர். பின்னரின் சங்கரின் சாதனைகளையும்,மணிரத்னத்தின் படங்களைப் பற்றியும் விவாதம் செய்தனர். இயக்குநர் சிகரம் பாலசந்தர்,பாலு மகேந்திரா ஆகியோரை எப்படி மிஸ் பண்ணினோம் என்பது பற்றியும் பேசிக்கொண்டார்கள். கவுதம் மேனன் சிலரை இளையராஜாவின் பாடல்களை பாடச்சொன்னார்.
இப்படியாக அன்றைய நீல இரவு கரைந்தது.












