மீ டூ பிரச்னை மட்டுமின்றி நடிக,நடிகைகள் மீதான புகார் பற்றி விசாரித்து தீர்வு காண நடிகர் சங்கம் நேற்றுதான் ஒரு கமிட்டி அமைத்தது.
அதற்குள் ஒரு புகார்.
தளபதி விஜய் படத்தை இயக்கிவரும் அட்லீ மீது துணை நடிகை கிருஷ்ணதேவி போலீசில் புகார் செய்திருக்கிறார். துணை நடிகர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் செய்திருக்கிறார். தளபதி விஜய் நடித்துவரும் படத்தில் நடிக்க சென்ற தன்னை அட்லியும் உதவியாளர்களும் தரக்குறைவாக பேசி வெளியில் அனுப்பி விட்டதாக புகாரில் கூறி இருக்கிறார்.
அவர் அளித்த புகாரையும் அதற்கு காவல்துறை அளித்த பதிவையும் படத்தில் காணலாம்.