
இந்த தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டளிக்கும் உரிமை இல்லாது போனது. அவரது மனைவி மட்டும் வளசரவாக்க்கத்தில் இருக்கிற வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார்.
சிவகார்த்திகேயன் எவ்வளவோ வாதாடியும் அவரது பெயர் பட்டியலில் இல்லை என சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள்.
ஆனால் மதியம் திரும்ப வாக்குச்சாவடிக்கு வந்து சிவகார்த்திகேயன் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார். அவர் அவ்வாறு அனுமதிக்கப்பட்டது தவறு என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை அனுமதித்தவர் மீது இலாகா ரீதியான நடவடிக்கை என்கிறார்கள்.
அப்படியானால் சிவகார்த்திகேயன் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பதை கண்டறிந்து எண்ணிக்கையில் இருந்து நீக்க முடியுமா? ஒருவர் யாருக்கு ஓட்டுப்போட்டார் என்பது தெரியக்கூடாது .இது அரசியல் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பு. இதெல்லாம் என்னாவது?
ஓட்டுப்போடாமலேயே நடிகர் ஸ்ரீ காந்த் கையில் மை வைத்ததாகவும் ஒரு புகார் இருக்கிறது.
அட கடவுளே!












