
தமிழ் தெலுங்கு என பிசியாக இருக்கிற நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். மணி மைண்டட் ஆர்டிஸ்ட். தெலுங்கில் இவர் கொடுத்த கால்ஷீட்எதிர்பாராதவிதமாக கேன்சல் ஆனதால் ஏப்ரல் 13,14 ஆகிய இரு தேதிகள் ஃபிரீயாக இருந்ததால் சிறிலங்காவில் இருந்து வந்த அசைன்மெண்டை ஒத்துக்கொண்டு விட்டார்.
அந்த இரு நாட்களும் சிறிலங்காவின் புத்தாண்டு கொண்டாட்ட தினமாகும்.
அங்கு பிரபலமான பாலிஸ் காசினோ சூதாட்ட கிளப்பில் ஒரு மணி நேர வேலை. சூதாட்டம் ஆடவேண்டும் அங்கு வரும் பிரபலங்களுடன் பேசிக் களிக்க வேண்டும்.
இதற்காக காஜலுக்கு பெருந்தொகை கோடிகளில் கொடுக்கப் பட்டிருக்கிறது. இரண்டு நாளும் நல்ல வேட்டை என்கிறார்கள்.
அந்த படங்கள்தான் தற்போது வெளியாகி இருக்கின்றன.இப்போது சிறிலங்கா நமது நடிகைகளுக்கு இவ்வகையான வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறது.












