
சும்மா இருந்தாலும் சுழி இருக்கவிடாது என்பார்கள்.
பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர் ஷாமி.
இவரது மனைவி ஹசின் ஜகான். மகள் பெயர் பேபூ. இந்த ஜகான்தான் புருசன் ஷாமி மீது மண்ணள்ளிப் போட்டு முன்னர் கிரிக்கெட்டில் விளையாடாதபடி செய்தவர்.
“என் புருசன் கள்ளப்பொண்டாட்டி வச்சிருக்கார்.நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என புகார் சொன்னவர். அந்த மனுஷன் ஷாமி போராடி மறுபடியும் விளையாட வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் புருசன் இல்லாத நேரமாகப்பார்த்து அவரது வீட்டுக்குள் புகுந்து மாமியார்,மற்றும் நாத்தனார்களுடன் சண்டை போட்டிருக்கிறார்.அவர்கள் போலீசில் புகார் பண்ணவே போலீஸ் வந்து ஹசின் ஜகானை அள்ளிக்கொண்டு போய் இருக்கிறது. கைது செய்து வழக்குப் போட்டிருக்கிறது.
இப்ப என்ன சொல்கிறார் தெரியுமா?
“என் புருசனின் செல்வாக்கை வைத்து என்னை கைது செய்ய வைத்திருக்கிறார்கள்!”












