
அந்த காலத்தில் புளிமூட்டை ராமசாமி என்று ஒரு சிரிப்பு நடிகர் இருந்தார். அவரது உருவமும் சிரிப்பும் யாரையும் ஈர்க்கும். வசனத்தை விட கோணங்கித்தனத்துக்கு நல்ல வரவேற்பு.
கால மாற்றம்.
மொக்கையாக அதாவது குண்டாக இருப்பவர்கள் என்றாலே மக்களுக்கு தனி ரசனை. இது ஆரோக்கியமல்ல என்றாலும் பழகிப் போனார்கள். அந்த ரசனை இன்றும் தொடர்கிறது.
அதன் பலன்தான் இன்று யோகி பாபு காமடியில் தனி ராசாங்கம் நடத்துகிறார்.சூரியின் ஒரே மாதிரியான நடிப்பு சலித்து விட்டதால் யோகிபாபுவின் சிலாங்கிற்கு வரவேற்பு இருக்கிறது. பெரிய நடிகர்களும் யோகிபாபுவை விரும்புகிறார்கள்.
கடந்த ஆண்டு 20
படங்கள் வரை நடித்திருக்கிறார். நடப்பு ஆண்டும் கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையைத் தொட்டு விடும் என்கிறார்கள்.
அவரது ஒரு நாளைய சம்பளம் இன்றைய நிலவரப்படி 7 லட்சமாக இருக்கிறது.












