
சிவகார்த்திகேயனின் 16 வது படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு எம்மானுவேல் நடிக்கிறார். இமான் இசை என்பது முன்னர் வந்த செய்தி.
இன்று இந்த படத்தில் யோகிபாபுவும் சூரியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. பொதுவாக இரட்டையர்கள் காமடி என்றால் ஒருவர் கை ஓங்கியே இருக்கும்.உதாரணம் கவுண்டமணிக்கு அடங்கியவராகவே செந்தில் எல்லா படங்களிலும் நடித்திருக்கிறார்.
யோகி-சூரி இருவருமே பிரபல நடிகர்களுடைய படங்களில் ஹீரோவுக்கு அடுத்தபடியாக நடிப்பவர்கள்தான்.இருவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இருந்தாலும் யோகிபாபு முதன்மையான கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.தற்போது காமடியன்களில் ஸ்டேட்டஸ் உயர்ந்தே இருக்கிறார்.சூப்பர்ஸ்டார் ரஜினியும் தனது படங்களில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை பிரபலபடுத்தியிருக்கிறார்.
முதன் முதலாக இருவரையும் ஒரே படத்தில் பாண்டியராஜ் பயன்படுத்துகிறார்.இது சோதனை மாதிரிதான்! சமமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டாலும் அவரவர் நடிப்பின் வழியாக தங்களை முதன்மைபடுத்திக்கொள்ள பார்ப்பார்கள்.தங்களின் பாடி லாங்குவேஜை பலவிதங்களில் முன்னிலைப் படுத்துவார்கள் .இதை கட்டுப்படுத்திக் கொண்டுபோக வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு,
இருந்தாலும் ரசிகர்களின் முதல் மார்க் யாருக்கோ அவர்தான் கவுண்ட மணி.அடுத்தவர் செந்தில்.!












