சினிமா உலகில் காதலுக்கு பஞ்சமில்லை. ஆனால் அது மணவறை வரை போகுமா என்பதுதான் கேள்வி.!
நயன்தாரா நல்ல உதாரணம்!
எஸ்.டி.ஆரை முதலில் காதலித்தார். கை கூடவில்லை.
பின்னர் பிரபுதேவாவை பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு காதலித்தார்.
காதல் காற்றோடு போச்சு. பச்சை கையோடு இருக்கு.
தற்போது மூன்றாவதாக இயக்குநர் விக்னேஷ்சிவன்.
கல்யாணம் வரை போகலாம் என்கிற நம்பிக்கை விக்கிக்கு இருக்கிறது.
ஆனால் மாமிக்கு அடங்கின மருமகளாகத்தான் இருக்க முடியும் .அவர்கள் கட்டுப்பாடான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
சரி,பிரபாஷ்-அனுஷ்கா ஷெட்டி ஜோடியை பார்க்கலாம்.
இவர்களது நெருங்கிய காதலை இருவருமே மறுத்து செய்தியை குப்பை என சொன்னாலும் ஆழமான நட்பு இருந்துதான் வருகிறது.
ஒரு நிகழ்ச்சியில் பிரபாஷ்,தமன்னா,அனுஷ்கா என நின்று கொண்டிருந்தனர்.
பாகுபலி டைரக்டர் கூட்டத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அனுஷ்காவிடம் சொல்லும்படி தமன்னாவிடம் ஒரு தகவலை சொல்லச்சொன்னார்.
தமன்னா சொல்லவில்லை.
மறுபடியும்பிரபாஷ் சொன்னார்.
அந்த இடத்தை விட்டே சென்று விட்டார் தமன்னா.!
“உங்க லவ்வுக்கு நானென்ன தூதா?”
கேட்பாரா மாட்டாரா?