
இயக்குநர் கரு.பழநியப்பன் .தமிழ்த் திரை உலகின் இன,மான உணர்வாளர்களில் ஒருவர்,
பத்திரிகையாளர் சந்திராவின் படத்தின் கதை நாயகன்.
கதை என்ன?
தேனி மலையடிவாரத்தில் வாழ்கிறவன் கள்ளன்.
கஞ்சி குடிப்பதற்கு என்ன செய்வது. காடுகளில் வேட்டையாடி வயிறைக் கழுவிக் கொண்டிருந்தான்.
வேட்டையாடக்கூடாது என்கிற சட்டம் வந்தது. வயிற்றைக் கட்டியது.

வேறு வழி? வேட்டையாடுவதற்கு உதவுகிற ஆயுதங்களை தயாரித்தான்.
சட்டம் வேட்டையாட கள்ளனும் வேட்டையாடினான் பணம் கொண்ட பெரும் புள்ளிகளை.!
ஒரு நாள் அவனது வேட்டை வாழ்க்கையை தடம் மாற்றுகிறது.
அது என்ன என்பதை சுவையுடன் படமாக்கியிருக்கிறார் சந்திரா.
கரு.பழநியப்பன் நிகிதா நடித்த காட்சிகளை அண்மையில் படமாக்கி இருக்கிறார்கள்.












