
“என் கதை. அதை இயக்கனும்கிற ஆசை எனக்கு இருக்காதா? ஆனா டைரக்டரை கேட்காம முதல் போஸ்டர் விட்டது பெரிய தப்பு .அது என்னுடைய சுயமரியாதைக்கு வைத்த வெடின்னே நினைக்கிறேன்.அக்சய் குமார் நல்லவர் .அவர் என்னுடைய நிலைமையை புரிஞ்சிப்பார்னு நினைக்கிறேன்” என்று சில நாட்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் வருத்தப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.
அதன் பின்னர் மும்பையில் இருந்து தயாரிப்பாளர்கள் சென்னைக்கு வந்து லாரன்சை சந்திப்பதாக இருக்கிறார்கள். அதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று லாரன்ஸ் எதிர்பார்க்கிறார்.
“அக்சய்குமாரின் ரசிகர்கள் எனது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எனது சுய மரியாதை காப்பாற்றப் படும் என்கிற உறுதி கிடைக்குமானால் நான் லட்சுமி பாம் படத்தை இயக்குவேன்” என்று சொல்லியிருக்கிறார்.
நல்லதே நடக்கட்டும்.












