
என்ஜிகே படத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இன்று தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. அத்தனை ஷோ க்களுமே ஹவுஸ்புல்தான்.
படத்தைப் பார்த்த பேட்ட பட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் வருகிற அரசியல் நையாண்டிகளை சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறார். மிகவும் தைரியமாக நடப்பு அரசியல்களை டைரக்டர் செல்வராகவன் சார் காட்டியிருக்கிறார்.சூர்யா சாரின் சூப்பரான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம் என பாராட்டி இருக்கிறார்.












