தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள சில பரிந்துரைகளில்
முக்கியமானது, மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்பது தான். அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் மற்றும்கல்வி அமைச்சர்.கேஏ.செங்கோட்டையன் ஆகியோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இணையதளங்களிலும் நெட்டிசன்கள் இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்ட் செய்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.https://twitter.com/arrahman/status/1135056979456479232












