“உறுதியா நிக்கப்போறோம்” என்கிறார் ஐசரி கணேஷ்.
தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் 23 -ம் தேதி நடக்க இருக்கிறது.
இதில் நாசர் தலைமையில் ஓர் அணியும் ,வேல்ஸ் பல்கலைக் கழக ஐசரி கணேஷ் தலைமையில் ஓர் அணியும் களம் இறங்குவது உறுதி ஆகி இருக்கிறது.
நாசர் அணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு எழுத்துப் பூர்வமாக இல்லாமல் வாட்ஸ் அப் வழியாக வந்திருக்கிறது.
தலைவர்:எம்.நாசர், துணைத்தலைவர்கள்:பூச்சி முருகன், கருணாஸ், பொதுச்செயலாளர் :விஷால், பொருளாளர்: எஸ்.கார்த்தி.
செயற்குழு உறுப்பினர்கள்.:
ஸ்ரீமன்,பசுபதி,அமர்நாத் என்கிற ரமணா, நந்தா,தளபதி தினேஷ்,சோனியாபோஸ், குட்டி பத்மனி,கோவை சரளா,பிரேம்குமார்,ராஜேஷ்,மனோபாலா,ஜெரால்டு, காளிமுத்து,ரத்னாப்பா,எம்.ஏ பிரகாஷ்,அஜய்ரத்னம், பிரசன்னா,ஜூனியர் பாலையா, ஹேமா சந்திரன், குஷ்பூ,லதா,நிதின் சத்யா,பருத்தி வீரன் சரவணன்,வாசுதேவன்,காந்தி காரைக்குடி,
இந்த அணியை எதிர்த்துதான் ஐசரி கணேஷ் ஜெயம்ரவி,உதயா ஆகியோர் அடங்கிய குழு தனது வேட்பாளர்களை நிறுத்தப்போகிறது. அனேகமாக இன்னும் இரண்டு நாட்களில் முழு அறிவிப்பு வந்து விடும்.