தற்போது சூடு பிடித்திருப்பது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல்தான்!
மாநகராட்சித் தேர்தலை விட படு சூடாக நடக்கும் போலிருக்கிறது. நாசர் -பாக்யராஜ் ஆகிய இருவர் தலைமையிலான அணிகள் மோதுகின்றன என்பது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெளிவருகிற செய்திகள்தான்!
ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி நிற்கும் என்பது அவரே உறுதி செய்தது!
உங்கள் அணியில் பாக்யராஜ் நிற்கிறாரா என்றால் “ஆம்” என உறுதி செய்த ஐசரி கணேஷ்.”பிற அணியில் இருந்து சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள் .குட்டி பத்மினி, நிதின் சத்யா,மனோபாலா ஆகியோர் வருகிறார்கள் “என்கிறார் .
குற்றாலம் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசரிடம் பேசியபோது….
“பத்திரிகைகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டிருப்பவர்கள் எங்கள் அணியினர்தான். இவர்களில் சிலர் அணி மாறினார்கள் என வருவதெல்லாம் உறுதி செய்யப்படாதவை என்றே நினைக்கிறேன். வருகிற 10 -ம் தேதி முழுமையான விவரம் தெரிந்து விடும் “என்றார்.
பாக்யராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை. டிஸ்கஷனின் இருப்பதாக அவருடைய உதவியாளர்கள் சொன்னார்கள்.