“சார்… 23 ம் தேதி ஓட்டுப்போட்டோட கையோட போனம்னா அதேகாம்பவுன்ட்ல எஸ்.வி.சேகர் நமக்கு அல்வா கொடுக்கிறாராம். ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை அல்வாவா இல்ல,இருட்டுக்கடை அல்வாவா எதுவா இருக்கும் சார்!”
“ஓ..நீங்க மருதக்காரரா ,,அதான் ஆதிகாலத்து ஒரிஜினல் மிட்டாய்க்கடை பத்தி சொல்றீங்க.! இருட்டுலதான் அவர் கிண்டுவாரு.! ஓட்டுப்போட்டுட்டு அப்படியே ஊரு போய் சேராம அல்வாவையும் வாங்கிட்டுப் போக சொல்றார்.அவ்வளவுதான்.!”
“நீங்க மெட்ராஸ்காரர். உள் குத்தெல்லாம் தெரிஞ்சிருக்கும். எங்களை மாதிரி நாடக ஆளுங்களுக்கு நன்மை கிடச்சிரும்ல.?”
“அதான் எஸ்.வி.சேகர் அல்வா கொடுக்கப்போறாரே!”