இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு விஜய் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள் .போஸ்டரை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
விஜய்,அட்லீ கூட்டணியில் ஏற்கனவே வெளியான மெர்சல் திரைப்படம் ,பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், இரவு 12 மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. படத்தைப் பார்த்தால் மீன் கடை வியாபாரியாகவும் வருவார் போல தெரிகிறது.
அதன்படி,இப்படத்தின் தலைப்பு “பிகிலு’ என்றும்,விஜய் இரட்டை வேடங்களில் தோன்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நாளை தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் ‘பிகில்’ என்ற படத்தலைப்பு தயாரிப்பு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது.