இயக்குநர் சுசீந்திரனின் ‘தோழர் வெங்கடேசன்’ என்கிற படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவுக்கு திமுகவின் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வந்திருந்தார்.
இயக்குனர் சுசீந்திரன் பேசுகையில் “மைனாவுக்கு பின்னர் ஜெயிக்கப்போகிற சிறு பட்ஜெட் படம் “இதுதான் என குறிப்பிட்டார்.
விபத்தில் இரு கைகளை இழந்த வெங்கடேசனுக்கு இழப்பீடு தராத அரசாங்கத்தின் பஸ்சை கோர்ட்டு ஜப்தி செய்து கொடுத்து விடுகிறது.அந்த பஸ்சை வைத்துக் கொண்டு வெங்கடேசன் குடும்பம் என்ன பாடு படுகிறது என்பதுதான் கதை.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசுகையில் “சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையிடுவதற்கான வழி வகைகளை செய்து தரவேண்டிய கடமை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. ஆனால் அந்த கடமையை செய்யத் தவறி விட்டதாக குறை இருக்கிறது. இதனால் சிறு படத்தயாரிப்பாளர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.”என குற்றம் சாட்டினார்.