“வர்றான் பாரு தண்ணி வண்டி” யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அந்தாளு டாஸ்மாக் தாசன் என பொருள்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டிக்கும் அதே அர்த்தம் .
ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் மாணிக்க வித்யா கூறும்போது, “இந்த பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை” என்கிறார்.
படத்தின் கதை குறித்து சூசகமாக கூறிய மாணிக்க வித்யா, மாவட்ட வருவாய் அலுவலரின் கதாபாத்திரத்திற்கு பல பரிசீலனைகள் இருந்தன என்று கூறுகிறார். இது குறித்து மேலும் கூறும்போது, “ஆம், இது வலுவான முக்கியத்துவத்தை கொண்ட ஒரு கதாபாத்திரமாகும், குறிப்பாக சக்திவாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது, இறுதியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்” என்றார்.