தனிப்பட்ட விரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு சிலரை வறுத்து எடுப்பதில் சின்மயிக்கு நிகர் சின்மயிதான்!
ஊருக்கெல்லாம் பெண் பார்க்கும் சுப்பாத்தா தலையில் ஈரும் பேனும் அப்பிக்கிடக்கும் கதைதான் சின்மயி கதையும்.!
“ஹீரோக்கள் எல்லாம் மகள் வயது பெண்களுடன் ரொமான்ஸ் பண்ணுகிற மாதிரி படம் எடுக்கிறார்கள் .இதெல்லாம் எப்போது நிற்குமோ?” என ரொம்பவே கவலைப்பட்டிருந்தார் சின்மயி.
இவரது புருஷன் ராகுல் ரவீந்திரன் தெலுங்கில் இயக்கி இருக்கிற படம்தான் மன்மதுடு 2.இந்த படத்தின் நாயகி ரகுல்பிரீத் புகைப்பதுபோல் ஒரு காட்சி…இதுவும் பெண்ணியம்தானே..சின்மயி?
இதில் கதாநாயகன் சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா 59 வயசு .அடுத்த வருஷம் சஷ்டியப்த முகூர்த்தம். இவருடன் ஜோடி போட்டிருக்கும் ரகுல்பிரீத் வயசு 28.
இவைகளை வைத்து சின்மயியை எல்லோரும் ட்ரோல் பண்ணி வருகிறார்கள்.