பிரபலங்கள் செத்தால் தகனமோ அடக்கமோ நடந்து முடிந்த பிறகு மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்னார்கள்.
ஆனால் ஸ்ரீ தேவி இறந்த பின்னர் உடனடியாகவே சந்தேகம் எழுப்பப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் பண்ணியதில் தாமதம்,உடலை ஒப்படைப்பதில் தாமதம், உடனிருந்த ஸ்ரீ தேவியின் சொந்த சகோதரி ஊமையாகி ஒதுங்கிக் கொண்டது . போனிகபூர் இந்தியாவந்து பிறகு துபாய் சென்றது .இவை எல்லாமே ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டன.
ஆனால் அதிகமாக மது அருந்தியதால் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக சொல்லிவிட்டார்கள்.
இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சந்தேகத்தை கிளப்பி இருப்பவர் கேரள மாநிலத்து சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் .
கேரள தடய அறிவியல் மருத்துவ நிபுணர் உமாதாதன் அண்மையில் இறந்து போனார் .அவர் தன்னிடம் பேசுகையில் “ஸ்ரீ தேவியின் மரணம் இயற்கையானது இல்லை.”என்று சொன்னதாக ரிஷிராஜ் சொன்னார்.
“அது எப்படி ?என்று கேட்டதற்கு உமாதாதன் ‘ஒரு அடி ஆழமே உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் சாக முடியாது. எவ்வளவுதான் அதிகமாக மது குடித்திருந்தாளும்யாராவது கால்களை பிடித்து தலையை தண்ணீரில் மூழ்கடித்திருக்கவேண்டும்”என்று சொன்னார் என்பதாக சொன்னார் ரிஷிராஜ்.
என்னதான் ,எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் இந்த குரல் எடுபடாது.!