முன்னைப்போல இல்லை காஜலுக்கு !
தப்பாக நினைக்க வேண்டாம் தொடர்ந்து தெலுங்குப்படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட் சரிந்து விட்டது.
‘ராசு,காரி,கதி 2 ‘ என்கிற தெலுங்கு படத்தில் தமன்னா நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
என்ன நடந்ததோ திடீரென தனக்கு இந்தப்படம் வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.
சரி ஓய்வில்தானே காஜல் இருக்கிறார் என்று தயாரிப்பாளர் காஜலிடம் சென்று கதையைச் சொல்ல தமன்னா வாங்கியதை விட தனக்கு அதிகம் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பார்த்தார் தயாரிப்பாளர் “யேடு கொண்டலவாடா ..கோவிந்தா “என திருப்பதி மலை இருக்கும் பக்கமாகப் பார்த்து கும்பிடு போட்டு விட்டு கிளம்பி விட்டார்.