ஏ 1. என்றால் பர்ஸ்ட் கிளாஸ் படம் என்று சொல்லலாம். அக்கியூஸ்ட் நம்பர் ஒன் என்றும் சொல்லலாம்.
புத்திசாலி காமடியன் சந்தானத்தின் படப்பெயர்தான் ஏ 1
இந்த படத்தின் ஒன்னரை பாட்டு அண்ட் டீசரை இன்று வெளியிட்டார்கள்.
அக்ரகாரத்துப் பொண்ணுக்கும் நான்-வெஜ் பையனுக்குமான லவ் .இதுதான் படத்தின் ஹைலைட்.
இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள் சர்வ சாதாரணமாக கறி,மீன் சாப்பிடுகிறார்கள்.சிலர் ஆச்சாரமாக இருக்கிறார்கள்.
காதலுக்காக காதலி ஆம்லட் சாப்பிடுவது மாதிரி ஒரு சீன் வைத்திருக்கிறார்களாம்.
இதைப் பற்றி சிலர் பெட்டிஷன் போட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி நடிகர் சந்தானத்திடம் கேட்டதற்கு…
“இன்னிக்கி நேத்தா நடக்கிது.கவுண்டமணி செந்தில், வடிவேலு படங்களில் இல்லாததா? காமடின்னா கான்பிளிக்ட் இருக்கணும்.இல்லேன்னா காமடி இருக்காது. தியேட்டருக்கு வந்து ஒவ்வொருவர் அக்குளிலும் கிச்சு கிச்சு மூட்டவா முடியும்?
வேலைவெட்டியில்லாத வெட்டிப்பசங்க விளம்பரத்துக்காக இப்படி பண்றாங்க. படத்தை பாருங்க. யாரையும் நாங்க ஹர்ட் பண்ணல.சந்தோஷமாக வந்து சிரிப்போடு திரும்பனும்” என்கிறார் சந்தானம்.