
அமெரிக்காவில் பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு சிறு நீரக மாற்று அறுவைச்சிகிச்சை நடந்ததாக ஆந்திரத்து செய்திகள் அறிவித்தன.
இந்த நிலையில் அவருக்கு சிறு நீரகம் தானம் செய்தது அவரது தாய் என்பதாக அடிஷனல் செய்தி வாசித்தார்கள். .இந்த சிகிச்சை அமெரிக்காவில் நடந்ததாகவும் எழுதினார்கள்.
ஆனால் “அந்த செய்திகளை நம்பாதீர்கள்” என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் ராணா.
அமெரிக்காவில் அடுத்த படத்துக்கான முன்னேற்பாடுகளை ,தொழில் நுட்ப உத்திகளை ஆராய்ந்து வருகிறேன். டெக்னிக் கலர் வேலை பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் மெலிந்து விட்டேன் என்பதை சொல்லி இப்படிப்பட செய்திகளை பரப்புகிறார்கள். நம்பவேண்டாம் ” என ராணா அறிவித்திருக்கிறார்.












