தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும் போது ஏற்படுகிற இடையூறுகள் இன்னல்கள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை செயல்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் .விவரம்;
ஒன்று ,,

ரஜினி ,கமல், விஜய், அஜித் சூர்யா, கார்த்தி சிவகார்த்திகேயன் விஷால் தனுஷ் சிம்பு விஜய் சேதுபதி ஜெயம் ரவி ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் ஏரியாவில் மொத்தமுள்ள 110 திரையரங்குகளில் 45 டிஜிட்டல் பிரின்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது
அதன் விவரம் ,சேலம் டவுண் ஏழு திரையரங்குகள் ஓசூர் 2 திரையரங்குகள், தர்மபுரி 2 திரையரங்குகள், கிருஷ்ணகிரி 2 திரையரங்குகள், நாமக்கல் 2 திரையரங்குகள், குமாரபாளையம் 2 திரையரங்குகள், திருச்செங்கோடு 2 திரையரங்குகள், மற்ற அனைத்து ஊர்களிலும் ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது .
தீர்மானம் 2
மற்றும் அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 3
சேலம் ஏரியாவில் வியாபாரம் ஆகாத வெளியிட இயலாத சிறு முதலீட்டு திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் நலன் கருதி சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சிலில் பொறுப்பேற்று 3 சதவீத சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக் கொண்டு ரிலீஸ் செய்து தருவதாக தீர்மானிக்கப்படுகிறது
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில விநியோகஸ்தர்கள் குறு நில மன்னர்களாக வாழ்கிறார்கள்.அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த முயற்சி என்கிறார்கள். இவர்களால் தயாரிப்பாளர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறதாம்.
இன்னொன்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளால் ‘தல’ அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பாதிப்பு வரலாம் என்கிறார்கள்.