வைகைப் புயல் வடிவேலு நடிக்கவிருந்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி கை விடப் பட்டதாக செய்திகள்.
ஆனால் உண்மையில் கை விடப்பட்டவர் வடிவேலுதான்!
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி கை விடப்படவில்லை.!
சிம்பு தேவன்,இயக்குநர் ஷங்கர் இருவரையும் மதுரை அனுப்பானடி வாய்க்கால் ரேஞ்சுக்கு வாரிக் கொட்டியிருந்தார் வடிவேலு .டைரக்ஷனே தெரியாது சிம்புதேவனுக்கு என்று எந்த மூடில் அப்படி வாயை விட்டாரோ தெரியவில்லை.ஷங்கரை பொம்மை டைரக்டர் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் பின்னர் வருத்தம் தெரிவித்திருந்தார், ஆனால் கொட்டுனது கொட்டுனதுதானே!
பிரச்னை என்ன?
வடிவேலுக்கு 4 கோடி கொடுத்து விட்டார்களாம். இன்னும் 2 கோடி வேணும் என்று வடிவேலு கேட்டதாகவும் அதற்கு தயாரிப்புத் தரப்பு ‘வொர்த்’ இல்லை என்று மறுத்ததால் பிரச்னை வலுத்ததாகவும் சொல்கிறார்கள்.
முன்னைப் போல வடிவேலுக்கு மார்க்கெட் வால்யூ இல்லை என்கிறார்கள். இதனால் ஷங்கருக்கு வடிவேலுவை வைத்து ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை.
நாலு கோடி கொடுத்திருப்பது லைகா. ஆக பணம் பற்றி பேச வேண்டுமானால் லைகாவும் வடிவேலுவும்தான் பேசிக் கொள்ள வேண்டும் என ஷங்கர் ,சிம்புதேவன் இருவரும் ஒதுங்கிவிட்டனர்.