நடிகர்களுக்காக உயிரைக்கொடுக்க ரசிகர்கள் இருக்கிற நாட்டில் ,நடிகைகளுக்காக லட்சங்களை தியாகம் பண்ணுவதற்கும் தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்.
காஜல் அகர்வாலை ‘அடைவதற்காக’ ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் 75 லட்சம் வரை இழந்திருக்கிறார் என்றால் என்னத்தை சொல்வது?
அவரின் பெயர் பிரதீப்.
தியேட்டர்,லாட்ஜ்,ஸ்கூல்,காலேஜ்,சூப்பர் மார்க்கெட்,இப்படி நிறைய சொத்துகள் இவருக்கு இருக்கிறது.கடந்த இரண்டு நாட்களாக பிரதீப்பை காணவில்லை என்றதும் வீட்டாருக்கு சந்தேகம் வந்து விட்டது.பயம் எவரும் கடத்தி இருப்பார்களோ என்று.!
ஆனால் ஆள் கொல்கத்தாவில் இருப்பது தெரிந்ததும் போலீஸ் போய் அவரை கூட்டிக்கொண்டு வந்து விசாரித்தது.
அப்போதுதான் பிரதீப்பின் ஆசை தெரிய வந்திருக்கிறது.
“நீங்கள் நடிகையுடன் இருக்க வேண்டுமா,” என இணையத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். தனது ஆசை காஜல் அகர்வால் என்பதையும் சொல்லி இருக்கிறார்.
இதை வைத்து அந்த ஆட்கள் அதுக்கு 50 ஆயிரம் வரை செலவாகுமே.எதுக்கும் 25 ஆயிரத்தை அனுப்பி வையுங்கள் என சொல்லி பிரதீப்பின் ஐடி, போட்டோ ஆகியவைகளை அனுப்பச்சொல்லி இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் அனுப்பி விட்டு சில நாள் காத்திருந்து விட்டு அந்த போனுக்கு எப்ப வரணும் என்று கேட்டிருக்கிறார்.
இதுக்குப் பிறகுதான் அதிர்ச்சி.!
பிரதீப்பும் காஜல் அகர்வாலும் அரை நிர்வாணத்துடன் இருப்பது மாதிரியான மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை அனுப்பி மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். 75 லட்சம் வரை பறித்திருக்கிறார்கள்.
பிரதீப் வீட்டுக்குப் பயந்து கொல்கத்தா போய் விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை அசோக் நகர் லாட்ஜில் தங்கி இருந்த தயாரிப்பாளர் சரவணக்குமாரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள்,ஏமாற்றுகிறார்கள்,
எச்சரிக்கையாக இருங்கள்!