திருவண்ணாமலையின் முக்கிய நீர் ஆதாரம், 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாளையம் விண்ணமலை ஏரி.
இந்த ஏரியின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலமும் பயனடைகிறது. அது மட்டுமல்லாமல் ஆறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
ஆனால் பல வருடங்களாக தூர்வாராமலும் சாக்கடை நீர் கலந்தும், குப்பைகளை ஏரியில் கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது.
ஆதலால் இதை சீரமைக்கும் பணியை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் முன்னெடுக்கிறது. சீரமைத்து தூர்வாரும் பணி துவங்கி இருக்கிறது.